மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம்..!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம்..!
Published on

சென்னை,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்தார். சமீபத்தில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்தார்.

இந்த நிலையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் உயர்மட்டக்குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீடா ஞானராணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com