நெல்லையில் இருவேறு இடங்களில் மது விற்ற 2 பேர் கைது


நெல்லையில் இருவேறு இடங்களில் மது விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் ஊருடையார்புரம் டாஸ்மாக் கடை அருகே, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதி ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், ஊருடையார்புரம் டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் (27.04.2025) தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் மற்றும் போலிசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மந்திரம் மகன் பாலகிருஷ்ணன் (வயது 43) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்கள், பணம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதேபோல் திருநெல்வேலி மாநகரம், பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் (27.04.2025) மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஜெயராமன் (வயது 39) என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story