மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த   2 பேர் கைது.
கஞ்சா
Published on: 

சென்னை,

சென்னை செங்குன்றம் அருகே மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆர்டிஓ அருகே வாகன சோதனை

மேற்கு வங்காளத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று (புதன்கிழமை), சென்னை ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 பேரைப் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.

22 கிலோ கஞ்சா பறிமுதல்- கைது

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மற்றும் பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோரை உடனடியாக கைது செய்தனர்.

போலீசார் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் 2 பேரும் மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து சென்னைக்கு இந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளிலுள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வதற்காக இந்த கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் சர்வதேச நெட்வொர்க் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com