

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் உள்ளது. அங்கு இன்று காரில் ஆண், பெண் என இருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையானவர் திருவண்ணாமலையை சேர்ந்த ரஞ்சித்(வயது 45) என முதற்கட்ட தகவலானது தெரிய வந்திருக்கிறது. மேலும் உடனிருந்த அந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் யார்? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பிளாட்டுக்கு காரில் வந்தவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.