கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்தனர்.
கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு
Published on

கும்பகோணம்,

கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் பகுதியில் கொத்தனார் வேலைக்குச் செல்பவர்கள் சவுந்தரராஜ் மற்றும் பாலகுரு. இவர்கள் இருவரும் நேற்று மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். மேலும் அவர்கள் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com