சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
x

சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை ஐகோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story