தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு: டிடிவி தினகரன் வாழ்த்து


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு: டிடிவி தினகரன் வாழ்த்து
x

கோப்புப்படம் 

தேசிய நல்லாசிரியர் விருது பெற தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கும் தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2025-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.முதுநிலை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ரேவதி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வுடன் ஈடுபட்டு தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் தங்களது கல்விப் பணியை மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story