உடன்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 1-ல் 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை எட்டி சாதனை

தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
உடன்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 1-ல் 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை எட்டி சாதனை
Published on

தூத்துக்குடி,

உடன்குடி அனல் மின்நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 13.03.2026 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நி லையம் (2x660 மெகாவாட்) அலகு 1-ல் கடந்த மார்ச் 13-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த அலகில் தின சரி சுமார் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

உடன்குடி அனல் மின்நிலையத்தில் அலகு 1-ல் வணிக ரீதியான 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை விரைவில் கொண்டு வர முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன் டிப்படையில் உடன்குடி அனல் மின் நிலையம் அலகு 1-ல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி அடைய பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

வணிக ரீதியாக முழு மின் உற்பத்தி

இதனை தொடர்ந்து அலகு 1-ல் வணிக ரீதியான சோதனை உற்பத்திக்கான தொடர் முழு உற்பத்தி திறன் ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 2-ந் தேதி மாலை 4.16 மணி முதல் 5-ந் தேதி (நேற்று) மாலை 4.15 வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

இந்த சாதனை மைல் கல்லை தொடர்ந்து, இந்த அனல் மின் நிலையம் அலகு 1-ல் நேற்று மாலை முதல் 660 மெகாவாட் டுக்கு மேல் வணிக ரீதியாக முழு மின் உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், உடன்குடி அனல் மின் நிலையம் அலகு-2-ல் (660 மெகாவாட்) கட்டுமான வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் பாராட்டு

மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இந்த வணிக ரீதியான முழு மின்உற்பத்தி மைல் கல்லை எட்ட இரவு பகலாக அயராது உழைத்த தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் வி.அருண்ராய், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்தராவ். இயக்குனர் (திட்டங்கள்) எம்.சேதுராமன், உடன்குடி தலைமைப் பொறியாளர் (பொறுப்பு), கே.ராஜகுமார் மற்றும் அனைத்து பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். மேலும், எதிர்வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய இந்த அனல் மின்நிலைய மின்உற்பத்தி மிக முக்கிய பங்காற்றும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com