பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி மற்றும் ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம்.

அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் சகோதரர் அஸ்வின் ,தாமோதரன், பறையிசை கலைஞர் சகோதரர் வேலு ஆசான், இசைக்கலைஞர் புதுவை தட்சிணாமூர்த்தி, தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், குருவாயூர் துரை, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம். என தெரிவித்துள்ளார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com