

இட்டமொழி:
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாளை முன்னிட்டு 12 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நாங்குநேரியில் உள்ள ஓசானாம் அன்பு இல்லம் மற்றும் அரசன் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, நாங்குநேரி நகர செயலாளர் வானமாமலை, ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ், வர்த்தக அணி இணைச்செயலாளர் ஞானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.