உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பில் ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இ.சி.ஆர். சாலை சந்திப்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் ஒன்றிய உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தக்காளி அதிக விலைக்கு விற்கும் நிலையில் இலவசமாக கிடைக்கிறதே என பொதுமக்களும், நரிக்குறவர்களும் அங்கு திரண்டனர். இலவச தக்காளி வழங்குவதற்கான ஏற்பாட்டை உதயநிதி ரசிகர் மன்ற திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் எம்.பி.மோகன செய்திருந்தார்.

சமூக வலைதளம் மூலம் பிரபலமடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி இலவச தக்காளி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களும், நரிக்குறவர்களும் முண்டியடித்து கொண்டு தக்காளி வண்டி அருகில் சென்று தக்காளி பைகளை வாங்கி சென்றதை காண முடிந்தது. போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினாலும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் முண்டியடித்து சென்று மகழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com