பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி விமர்சனம் - எடப்பாடி பழனிசாமி பதிலடி

அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று உதயநிதி சொல்வார்? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி விமர்சனம் - எடப்பாடி பழனிசாமி பதிலடி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.

என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?

தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?

ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.

இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?

குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com