

மதுரை,
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.டி.ஐ.-யில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விதிவிலக்கு எல்லாவற்றிற்கும் அளிக்கப்படவில்லை. சாதி, மதம் மோதல் தொடர்பான வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் விதமாக இருந்தால் முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 20 பிரிவுகளில் ஒருசிலவற்றிற்குதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று பொதுவாக சொல்லாதீர்கள். எந்த அலுவலகத்தில் என்று கூறுங்கள். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் முற்றிலுமாக லஞ்சம் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு தெரிவித்தால் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் எங்கேயாவது கேட்டால் தெரிவியுங்கள் என மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்காதீங்க என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் இலலாமல் 100 சதவீதம் செய்ய வைப்பது அரசின் பொறுப்பு. பொதுமக்கள் புகார் அளித்த உடனே 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதயநிதி ஸ்டாலின் பகலிலேயே நிதானமின்றி பேசத் தொடங்கிவிட்டார். விரக்தியின் உச்சத்தில் பகலிலேயே இவ்வளவு நிதானமின்றி பேசுவார் என்றால், அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். இன்னைக்குதான் அவருடைய ஒரிஜினல் பெர்ஸ்னாலிட்டி, என்ன மாதிரியான நபர் என்பது வெளிப்படுது. வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சொந்த பழக்க வழக்கம் இன்று வெளிப்படுது. அவர்களை திருத்த முடியாது. இதைத்தான் நாங்கள் சொன்னோம். திமுகவினர், அவர்களுயைட கட்சியினர் வீட்ல போட்டு காட்டுங்க.
இப்படி ஆபாசமாக பேசும் உதயநிதியை நம்பி கட்சியில் பயணிக்கலாமா?. பெண்களுடன் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியுமா?. அந்த கட்சிக்கு பெண்கள் ஆதரவு கொடுப்பார்களா?. திமுகவுக்கு எதிர்காலம் உண்டா?. அவர் பேசும்போது பின்னாடி ஒரு பெண் வேட்பாளர் இருக்காங்க. அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க என்று வீடியோவில் பார்த்திருப்போம். எதையும் பற்றி கவலையில்லை. இவர்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம். அவர்களுடைய குடும்பத்திற்கு இதைத்தவிர எதையும் பற்றி கவலை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.