உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

12 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

பிடே 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்குதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

பிடே 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமது ஏ.எஸ்.ஷர்வானிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வளவு இளம் வயதில் அவர் அடைந்துள்ள இந்த மிகப்பெரிய சாதனையை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இது அவருக்கு இரண்டாவது உலக ரேபிட் சாம்பியன் பட்டமாகும். ஷர்வானிகா, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைகிறார் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது சதுரங்கப் பயணத்தில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com