

தென்காசி
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.55.93 கோடி மதிப்பீட்டில் 185 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7,127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப்பணிகள், பேரூராட்சிகள் துறையின் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 1 திட்டப்பணி, சுகாதாரத் துறையின் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 1 திட்டப்பணி என மொத்தம் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.42.62 கோடி மதிப்பீட்டில் 180 புதிய திட்டப்பணிகள், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் 1 புதிய திட்டப்பணி, பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.5.69 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.55.93 கோடி மதிப்பீட்டில் 185 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 204 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1,000 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 629 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.5.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 95 பயனாளிகளுக்கு 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 3,500 மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரூ.35.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.29.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முன்னோடி வங்கியின் சார்பில் 4 பயனாளிகளுக்கு கல்வி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார், ஈ.ராஜா, தி.சதன்திருமலைக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், நகராட்சி உறுப்பினர் வே.ஜெயபாலன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.