எம்.எல்.ஏ.க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு... விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு... விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை கோடம்பாக்கத்துல போலீசார் உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது. போலீஸ் கிட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.

இதுமட்டுமல்ல, வேளச்சேரியில நடைபயிற்சி போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு. கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.

இந்த சோபா மாடல் ஆட்சியில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல. ஆட்சியை காப்பாத்திக்க எம்.எல்.ஏ.க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க காவல்துறையை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com