உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக்கொண்டிருக்காது என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
அமைச்சர் அருண்ராஜ்
Published on

சென்னை,

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக்கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com