64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு

உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு
Published on

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. சார்பு நீதிமன்றத்தில் ஒரே அமர்வாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

64 வழக்குகளுக்கு தீர்வு

அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறு குற்றத்திற்குரிய வழக்கு 55-ல் 47 வழக்குகள் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 200-க்கும், வங்கி வராக்கடன் வழக்கு 3 வழக்கு ரூ.8 லட்சத்து 54 ஆயிரத்து 280-க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 10-ல் 8 வழக்குகள் ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்து 600, இதர சிவில் வழக்கு 3-ல் 2 வழக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 750-க்கும், காசோலை மோசடி வழக்கு 3-ல் 2 வழக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், மணமுறிவு வழக்குகள் 3-ல் 2 வழக்கு சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆக மொத்தம் 77 வழக்குகள் எடுக்கப்பட்டு 64 வழக்குகளுக்கு ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் உடுமலை ஜே.எம்.எண்.2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, அரசு வக்கீல் எம்.சேதுராமன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள் மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com