மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
Published on

மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள் ளது. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும்.

உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டு மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com