முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது

சுவாமிமலை முருகன் கோவிலில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி மணக்கோலத்தில் கைது செய்யப்பட்டார்.
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மதனத்துர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ் (வயது42). இவர் அலகாபாத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த செல்லாராணி(41). இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மகன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் மராட்டியத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சுபாஷ்சந்திரபோசுக்கும் அவரது மனைவி செல்லாராணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

இதனால் சுபாஷ்சந்திரபோஸ் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் மதுரை மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த ஒருவரை சந்தித்து தனக்கு திருமணமாகவில்லை என கூறி அவரது மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டார். இதை நம்பிய பெண்ணின் தந்தை சுபாஷ் சந்திரபோசுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தார்.

நேற்று காலை கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் சுபாஷ்சந்திரபோசுக்கும் மதுரையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மணக்கோலத்தில் சுபாஷ்சுந்திரபோஸ் திருமணத்துக்கு தயாராக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com