சங்கராபுரம் அருகேபெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சங்கராபுரம் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
சங்கராபுரம் அருகேபெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே பிரசித்த பெற்ற தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டார். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com