அடையாளம் தெரியாத ஆண் பிணம்

நாகூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com