அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஆற்காடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

ஆற்காடு

ஆற்காட்டில் இருந்து முப்பது வெட்டி செல்லும் சாலையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் கடந்த இரண்டு நாட்களாக அதே பகுதியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரின் கண்களில் ரத்தக் கசிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com