அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

நாகூரில் உள்ள தர்கா குளத்தில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் மிதந்தது. தகவல் அறிந்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் நாகை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி இறந்தவர் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை நாகூர் போலீசார் பிரதே பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com