அடையாளம் தெரியாத ஆண் பிணம்

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

செய்யாறு

செய்யாறு தாலுகா காழியூர் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை எதிரில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com