அடையாளம் தெரியாத ஆண்பிணம்

அடையாளம் தெரியாத ஆண்பிணம்
அடையாளம் தெரியாத ஆண்பிணம்
Published on

நீடாமங்கலம் போலீஸ் சரகம் நடுப்படுகை வெண்ணாற்றங் கரையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com