ஒரே மாதிரியான பணிக்கொடை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும்

அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பணிக்கொடை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும்.
ஒரே மாதிரியான பணிக்கொடை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும்
Published on

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்டாப் யூனியனின் பொது பேரவை கூட்டம் மாநில துணைத்தலைவர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஆனந்த் வரவு செலவு அறிக்கை வாசித்தார். கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரகுமார், மதுரை மாவட்ட பொது செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய பேச்சு வார்த்தை விரைந்து முடித்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2015-2016-ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பணி மூப்பு பட்டியல் வழங்க வேண்டும். மாநில கூட்டுறவு வங்கியுடன் 21 மாவட்ட, மத்திய கூட்டு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் உதவி மேலாளர் பணியிடங்களில் உள்ளவர்களை சரக மேற்பார்வையாளராக பணியமர்த்த வேண்டும். அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும், ஒரே மாதிரியான பணிக்கொடை தொகை உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் சசிகுமார் வரவேற்றார். முடிவில் தென்னரசு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com