பிஎஸ்என்எல் சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


பிஎஸ்என்எல் சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
x

தமிழ்நாடு முழுவதும் தடையின்றி இணைப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளறது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"சென்னை பெருமாநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் பிஎஸ்என்எல் அலைபேசி சேவை, கடந்த மூன்று நாட்களாக முழுமையாக செயலிழந்து கிடக்கின்றது. சென்னை, அண்ணாசாலையில் உள்ள, மத்திய மண்டல அலுவலகத்தில் கடந்த 20 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்து மில்லியன் டாலர் வினாக்களை எழுப்புகிறது. தனி நிறுவனத்துக்கு சாதகமாக செய்யப்பட்ட சதியாக இருக்குமோ? என்ற ஆழமான சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

மூன்று நாட்களாகியும் அலைபேசி சேவை தொடர்பில் ஏற்பட்ட துண்டிப்பு சரி செய்யப்படாததால், அவசர சிகிச்சை, காவல் உதவி, தீயணைப்பு தொடர்பு என எல்லாம் செயலிழந்து கிடக்கிறது. வாடிக்கையாளர் நிறுவனத்தை அணுகி கேட்கும் போது, வேறு நிறுவனத்தின் சிம் கார்டுக்கு மாறி போகுமாறு, பிஎஸ்என்எல் நிறுவனம் கூறிவருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை பெருமாநகரிலும், தமிழ்நாடு முழுவதும் தடையின்றி இணைப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story