மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! - பெ.சண்முகம்

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வு இருண்டு விட்டதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெ.சண்முகம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்த ஆண்டில் மட்டும் நீட் தேர்வு கேள்வித்தாள் அவுட், தேர்வு ரத்து. கியூட் தேர்வு முறையாக நடக்கவில்லை, தேர்வு ரத்து. சிபிஎஸ்இ தேர்விலும் குளறுபடி, விசாரணை நடக்கிறது.

தேர்வு நடத்துவதில் தோல்வி

கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நேர்மையாகவும் தேர்வு நடத்துவது. ஆனால், தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.

ராஜினாமா

கல்வி அமைச்சகம் துவங்கி அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயலுக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வு இருண்டு விட்டது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com