தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, தாய் மொழியில் பயின்றால்தான் அறிவை வளர்க்க முடியும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், தாய் மொழியில் பயின்றால்தான் அறிவு வளரும் என்றும் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, தாய் மொழியில் பயின்றால்தான் அறிவை வளர்க்க முடியும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும். தாய் மொழி கல்வி தான் அதிக பலன் தரும்.

தமிழகத்தை சோழ மன்னர்கள் ஆண்டபோது பொறியியல் படிப்பு இல்லை. கட்டிட வியல் பயிலாமல் பல கட்டிடங்கள், கோவில்களை தமிழர்கள் கட்டினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான். பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தமிழ் மொழிக்காக பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பின்னர் மத்திய இணை மந்திரி முருகன் பேசும்போது,

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புகள் தகவல் ஒளிப்பரப்பு துறை மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சுயசார்பு பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.

இதுபோன்ற சுயசார்பை தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் சுதந்திர போராட்ட காலத்திலேயே செய்து காட்டினார். 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்ற மோடியின் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நனவாக்குவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com