25ம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி 5 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
25ம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

சென்னை,

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி தமிழ்நாட்டிற்கு வரும் 25ம் தேதி வருகை தர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி கோவையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை, வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com