மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை
Published on

சென்னை,

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவானது இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில்மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த திருமண விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார். தற்போது அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.

இவரது வரவை முன்னிட்டு சென்னைவியில் சில பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக அமித்ஷா செல்ல இருப்பதால் அந்த சாலையில் செல்ல மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com