

சென்னையில் மெரீனாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.