

சென்னை,
தினத்தந்தி அதிபர், மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த நினைவு இல்லத்திற்கு இன்று காலை மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பின்னர், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், அங்கு வைக்கப்பட்டிருந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் மக்கள் சேவை மற்றும் சாதனை தொகுப்பு படங்களை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோருடன் கலந்துரையாடிய அவர்கள், பிரதமர் நரேந்திரமோடியின் 12 ஆண்டு கால ஆட்சி பயணத்தில் இடம்பெற்ற முக்கிய சாதனைகள் மற்றும் நிகழ்வுகளை தொகுத்து வெளியிடப்பட்ட புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.