ஏபிவிபி மாணவர்களை தாக்கிய விசிகவினரை கைது செய்ய வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல்: மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துகளை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com