

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்கி, மக்கள் நலன் மற்றும் மாநில முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.