மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை..!

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகிறார்.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை..!
Published on

சென்னை,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத்சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டேரிடம் ராஜ்நாத்சிங் ஆலேசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் மாலை 6.20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com