மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தட்சன ரெயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பொன்னேரி வட்ட செயலாளர் சூர்யபிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். மதுரையில் இருந்து பிரயாக்ராஜ் வரை தனியார் நிறுவனம் மூலம் ரெயில்களை இயக்குவதை கைவிட வேண்டும். ரெயில்வே துறையை மத்திய அரசே முழுமையாக ஏற்று நடத்திட முன்வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com