மதுரையில் அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளை மத்திய செயலாளர் நேரில் ஆய்வு

மதுரையில் அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் மீன்களை உற்பத்தி செய்து 3.75 லட்சம் வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளை மத்திய செயலாளர் நேரில் ஆய்வு
மீன்வளர்ப்பு பண்ணைகள்
Published on: 

சென்னை,

மத்திய மீன்வளத்துறை செயலாளர் அபிலாக்ஷ் லிக்கி மதுரையில் அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளை நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பாராட்டு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் இயங்கி வரும் பாண்டிமுனீஸ்வரர் ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு பணியை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது, மீன்வளர்ப்பு விவசாயிகளிடம் உரையாடிய அவர். அலங்கார மீன் வகைகள், மீன்குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவுகள், நீர்தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். உள்நாட்டு மீன்வகைகள், மீன் குஞ்சு பொறித்தலில் அறிவியல் நடைமுறைகள், தொழில்நுட்ப ஊக்குவிப்பு ஆகியவற்றை பாராட்டினார்.

மதுரை

நாடு முழுவதும் 34 அலங்கார மீன்வளர்ப்பு தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், உற்பத்தி, மீன்குஞ்சுகள் விநியோகம், உள்கட்டமைப்புகள், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தில் மதுரையில் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

3.75 லட்சம் வருமானம்

பாண்டி முனீஸ்வரர், ஒருங்கிணைந்த அலங்கார மீன்பண்ணை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 லட்சம் மீன்களை உற்பத்தி செய்து 3.75 லட்சம் வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com