தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 July 2025 10:48 PM IST (Updated: 4 July 2025 12:04 PM IST)
t-max-icont-min-icon

திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை தொடக்கிவைத்து, வீடுவீடாகச் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களைச் சந்தித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட "ஓரணியில் தமிழ்நாடு" முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ்குமார், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!" தமிழ்நாட்டின் ஒற்றுமையை நமது வலிமை.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.



1 More update

Next Story