

சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.