முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்திப்பு.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்திப்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.பஞ்சநாதம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.பார்த்தசாரதி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.செல்வம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.முருகேசன்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி.குழந்தைவேலு, திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாமரை செல்வி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கிருஷ்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே.பிச்சுமணி, ஜெ.ஜெ.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.அன்பழகன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்.ராஜேந்திரன், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வைதேகி விஜயகுமார், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பெ.காளிராஜ் ஆகியோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com