வேடசந்தூர் அருகே குடகனாறு அணையில் ஆண் பிணம்

வேடசந்தூர் அருகே குடகனாறு அணையில் அடையாளம் தெரியாத பிணம் கிடந்தது.
வேடசந்தூர் அருகே குடகனாறு அணையில் ஆண் பிணம்
Published on

வேடசந்தூர் அருகே அழகாபுரி கூத்தாங்கல்பட்டியில் உள்ள குடகனாறு அணையில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூம்பூர் போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அணையில் மிதந்தவரின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அணையில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com