

நெல்லை
தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தென்காசிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட டன் கணக்கிலான மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்சென்றனர். அந்த கழிவுகளுக்கு தீ வைத்ததால் எழுந்த நச்சுப்புகையால் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்தன. அதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு தடையும் விதிக்கப்பட்டது. மீறி கொண்டு வரப்படும் கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன.
இந்த சூழலில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.