சிதம்பரத்தில்உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது

சிதம்பரத்தில் உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது செய்யப்பட்டா.
சிதம்பரத்தில்உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது
Published on

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சைமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்கிற ஜெய்சங்கர் (வயது 53). இவர் கூத்தங்கோவில் அருகே கருவை தோப்பில் உரிய அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகள் தயார் செய்வதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா, சப் -இன்ஸ்பெக்டர் டைமன்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு உரிமம் இன்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 1 கிலோ வெடிமருந்து கலந்த கரித்தூள் மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com