தாம்பரம் - ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தாம்பரம் - ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
- தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்:06017) வருகிற 29-ம் தேதி அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
- மறுமார்க்கத்தில், வருகிற 30ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06018) அடுத்த நாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






