வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட முன்பதிவில்லா மெமு ரெயில் ஆகஸ்டு 2-ந்தேதி முதல் தினசரி இயக்கப்படுகிறது.

* வேலூர் கண்டோன்மெண்ட்-சென்னை கடற்கரை (வண்டி எண்:06034) இடையே தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மெண்ட் (06033) இடையே தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் மாலை 6 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com