3 திருமணங்களுக்குப் பிறகும் அடங்காத மோகம்…இளம்பெண்ணை வரவழைத்து 4 -வது கணவர் செய்த அதிர்ச்சி சம்பவம்

சுவேதாவின் பின்னணி குறித்து அஜித்குமார் விசாரிக்க ஆரம்பித்ததும் அவருக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
இளம்பெண்ணை வரவழைத்து 4 -வது கணவர் செய்த அதிர்ச்சி சம்பவம்
Published on: 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவர் கடந்த வருடம் சென்னை பூந்தமல்லியில் உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துவந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டதாகவும், தனக்கு பெற்றோர், உறவினர்கள் என யாருமில்லை என சுவேதா கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அஜித்குமார், சுவேதா மீது கொண்ட காதலால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு அஜித்குமாரின் சொந்த ஊரான வத்திராயிருப்பில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர். சுவேதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததோடு, எந்நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுப்போட சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, உறவினர்களை பார்த்து வருவதாகச் சொல்லியுள்ளார். ‘உனக்குத் தான் யாருமில்லையே! என கணவர் விசாரிக்க, சுவேதா மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இதன்பிறகு சுவேதாவின் பின்னணி குறித்து அஜித்குமார் விசாரிக்க ஆரம்பித்ததும் அவருக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. சுவேதாவிற்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சுவேதாவின் சொந்த ஊரான எரியோட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த உண்மைகள் தெரிந்து அஜித்குமார் சண்டை போட, சுவேதா சென்னைக்கு வராமல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இப்படியான சூழலில் கடந்த மாதம் பழைய பிரச்சினைகளை எல்லாம் மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் எனக்கூறி சுவேதாவின் பெற்றோர் வீட்டினருகே வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் இருந்து வந்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையே பிரச்சினை ஓயவில்லை. சுவேதா தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே, தீபாவளியன்று சுவேதாவின் செல்போனை பார்த்துவிட்டு அஜித்குமார் சண்டை போட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுவேதாவை சரமாரியாக வெட்டிவிட்டு, எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா உள்ளிட்ட போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுவேதாவின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் சுவேதாவின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X