தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செங்கோட்டை தாலுகா செயலாளர் வேலுமயில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பாலு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com