

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம், குதிரை பேரத்தில் ஈடுபடுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி தொடர்பாக அவர் இன்று பதிலளித்து பேசினார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தி.மு.க.விற்கு குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
யாரையும் விலை கொடுத்து வாங்க கூடிய அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. ஆனால், மன மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு உண்டு.
த.வெ.க.வில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது என்றார். த.வெ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தயவு தி.மு.க.விற்கு தேவை இல்லை. மக்களின் பேராதரவு தி.மு.க.வுக்கு உள்ளது என்றார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை பற்றிய கேள்விக்கு, வைகோ மனுசனே இல்லை. அவரை பற்றி பேசாதீர்கள் என காட்டத்துடன் கூறினார்.